விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மே 9-ம் தேதி கேதார்நாத் கோயில் நடை மீண்டும் திறப்பு

உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை மே 9-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

News image
Updated On :5 மார்ச் 2019, 8:42 am

டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை மே 9-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

சிவபெருமானின் 12 வகையான ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து வருகை புரிந்து தரிசித்துச் செல்கின்றனர்.

இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், மே மாதம் 9-ம் தேதி காலை 5.35 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 7.32 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வந்து தரிசித்து சென்றுள்ளனர். அதன்படி, இந்தாண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு  வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.