
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பங்குனி விழா மார்ச் 13-ல் தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறுகிறது.
அதுவரை தினமும் ஒரு மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளுவார். அப்போது மண்டகப்படிதாரர்களால் சுவாமிக்கு பட்டு பரிவட்டங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு சுவாமிக்கு பட்டுச் செலுத்துபவர்கள் ஒரு நாட்களுக்கு முன்னதாக அசல் பட்டு, பரிவட்டங்களை வாங்கி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.