சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய எளிய பரிகாரம்!

சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய எளிய பரிகாரம்!

சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேய், பிசாசுத் தொல்லைகள், மனநோய்..
Published on

சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேய், பிசாசுத் தொல்லைகள், மனநோய், நரம்புத் தளர்ச்சி காரணமாக, கை, கால் செயலற்றுப் போதல், கல்லால்  அடிபடுதல், கல்லீரல் பையில் ஏற்படும் குறைபாடு, கை கால் மூட்டுகளில் வலி, ஆஸ்துமா, எலும்பு முறிவு இவற்றைத் தருவார்.

நம் உடலில் சனி கிரக மின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதால் மேற்கண்ட பிரச்னைகளை சரி செய்யலாம். சனிக்கிழமை அன்று மரப்பலகை அதன் மேல் எள்ளு அதன் மேல்  செம்பிலான குடுவை(செம்பு) வைத்து அதனுள் தண்ணீர் ஊற்றி வைக்கவும். அதன்மேல் தேங்காய் ஒன்றை வைக்கவும், பின் அந்த தண்ணீரைத் தினமும் குடித்து வரவும். 

வாரம் ஒருமுறை எள்ளை மாற்றவும். "மேற் கண்ட வியாதிகள் படிப்படியாகக் குறையும்."

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர்.

சனி காயத்ரி மந்திரம்

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|

தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

பொருள்
காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தைக் கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன்  பலனாக அவர் நம்மைக் காத்து ரட்சிப்பார்.

உங்களுக்கு ஏழரை சனியா? அஷ்டம சனியா? இந்த மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்லுங்கள். சனி பகவானின் கருணை உங்களுக்குக் கிடைக்கும்.

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com