மனதைப் பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 1

கடக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது ஜெனனமானவன் அவனது தோற்றத்தையும்..
மனதைப் பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 1

“நாசமிலாக் கடகத்தின் மதியுலாவச்  சனித்தோன் 

நண்ணுபலன் மடவாரை நகைபுரிந்து சயிப்பன்

வீசிவளைந் தேடுவன்அன்  புடையன்நண்ப ருடையோன்

வீடதிக மாய்க்கட்டி   மேவுவன்மெய் குறளன்

நேசமுறு மனக்கள்ளன்  உத்தேச முள்ளான்

நிலையில்லாத் தனம் படைத்தது நீள்நிலத்தில் இருப்பன் 

பாசமுடன் அனைவருக்கும் பருத்தகழுத் துளனாம்   

பரவுசம உபாயனென வேபகர வேண்டும்.”

                       - ஜாதக அலங்காரம் சந்திரன் பெருமை கூறப்படுகிறது.

கடக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது ஜெனனமானவன் அவனது தோற்றத்தையும் குணத்தையும் அழகாகக் கூறப்படுகிறது.

எங்குப்பார்த்தாலும் எல்லா வீட்டிலும் எதாவது பிரச்னைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது உடலில் பெரும் பகுதி எல்லா நோய்க்கும் முடிந்தவரை மருத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் உடலையும் தாண்டி ஒருவித மனம் என்ற சந்திரன் ஓட்டத்திற்கு அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இதைப்பற்றி ஆராய்ந்து வெளிவந்தது.

முக்கியக் காரணகர்த்தா ஒருவரே 

  • நோயின் தாக்கமும், புதுவகையான நோயின் பெயருடன் இக்காலங்களில் அதிகமாக உள்ளது. நோயின் தாக்கம் ஏன் வந்தது என்று ஆராய்ந்தால் மருத்துவர் கூறுவது “stress” என்னும் மனஅழுத்தமே காரணம். அதனால் தான் மக்கள் மன அமைதிக்கு யோகா நிலையத்திற்குப் படையெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
     
  • நிறையப் பெற்றோர்களின் கவலை குழந்தைகளின் தங்கள் கவனத்தைப் படிப்பை நோக்கிச் செலுத்தமாட்டார்களா? என்ற ஒரு ஏக்கம்.
     
  • வயதானவர்கள் குறை கூறுவது என் மனதைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. என்னோடு என்பிள்ளை பேசவில்லை, பேரன் பேத்தி என்னைப் பார்க்க வரவில்லை என்று மனதைப் பாதிக்கும் சம்பவம்.
  • ஜாதககாரர்களும் திருமணம் ஆகவில்லை என்ற பிரச்சனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் திருமணம் ஆன தம்பதியருக்கு மனம் சார்ந்த பிரச்னையில் தவித்து கோர்ட். கேஸ் என்று அலைகிறார்கள். சுக்கிரன் தான் களத்திரக்காரனாக இருந்தாலும் மனத்தினை சரியான விகிதாசாரத்தில் வைத்திருப்பது சந்திரன். இதில் கொஞ்சம் சந்திரன் அளவுகோல் மாறினாலும் மனதைப் பதம் பார்த்துவிடும்.

இதற்கு ஒட்டுமொத்தமான முக்கிய காரணகர்த்தா மனதைச் சுற்றிக்கொண்டு இருக்கும் சந்திரன்.

மனநோயாளியாக மாற்றும் சந்திரன் 

  • சந்திரன் பூமியில் விழும்  2- வது ஒளி கிரகம், இவர் சூரியனின் ஒளியாய் பெற்று நமக்குத் தருகிறார். இவர் கடவுள் பாதி மிருகம் பாதி என்று இருவகை முகம் கொண்டவர். இவர் சூரியனின் அருகில் இருக்கும்பொழுது வளர்பிறை சந்திரனாகவும் (சுபர்) சூரியனை விட்டு விலகும்பொழுது தேய்பிறை சந்திரனாகவும் (அசுபர்) திகழ்வர். பெரியோர்கள் நம் ஒருவேளை செய்யும்  பொழுது இன்று உனக்கு சந்திராஷ்டமம், உனக்கு ஜென்ம நட்சத்திரம் என்று வேலையைத் துவக்கத்தில் தடுத்துவிடுவார்கள். இவர் மிகவும் நல்லவர் என்ற கோணத்திலிருந்து மாறுபட்டு பாவியாக எப்பொழுது செயல்படுவர் என்று பார்ப்போம்.
     
  • நிறைய பேருக்கு எவ்வளவு தான் பிரச்சனை என்றாலும்  எதிர்த்துச் செயல்படுவர் ஆனால் மனதால் ஏற்படும் பிரச்சனை உறக்கம் வராது, சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியாது,  உணவு உன்ன முடியாது என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.
     
  • நிறைய யோகங்களும் தோஷங்களும் சந்திரனைக்  கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் அசுபரோடு சேரும்பொழுது, பார்க்கும்பொழுது எண்ணற்ற தீய விளைவுகள் ஏற்படுத்துவார். இன்னும் சந்திர தசை சனிபுத்தி காலங்களில் இந்த பாதிப்பு அதிகமாகும். இதுதவிர ஏழரைச் சனி பாதிப்பு சந்திரன் வைத்துச் சொல்லப்படுகிறது.
     
  • நான்காம் பாவத்தின் நாயகன், கால புருஷ தத்துவப்படி சந்திரன் தன் நாலாம் பாவமான கடக ராசியை இயக்குவார். தாய், கற்பு, ஒழுக்கம், மனது, இருதயம், வாகனம், சொத்து, சுகம்  என்று இயக்கிக் கொண்டு இருப்பார். இதில் சந்திரனோடு பாவிகள் சேரும்பொழுது இதன் தாக்கம் அதிகமாகும்.
     
  • சந்திரன் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் கால்களில் பாவிகளோடு பயணம் செய்யும் பொழுதும் இந்த மன ரீதியான பிரச்னை ஏற்படும். முக்கிய பாவமான 1, 2, 4, 7 இருந்தால் மதி கெட்டுப் பாதிப்பு அதிகப்படும்.
  • ஜாதகத்தில் தேய்பிறை சந்திரன் சனி இரண்டும் பரிவர்த்தனை, சேர்க்கை, சமசப்தம பார்வை பெற்றாலோ, சனியின் நட்சத்திர கால்களில் சந்திரன் அமர்ந்தாலோ அல்லது சந்திரன் நட்சத்திர காலில் சனி அமர்ந்தாலோ இந்த தோஷம் ஏற்படும். குருவின் பார்வையும் பெற்றால் குருவின் நட்சத்திர காலில் பயணம் செய்தால் இதன் பாதிப்பு குறையும்.   திருமணமான பிறகு மணமகன் மற்றும் மணமகள் எதற்காக சண்டை போடுகிறாள் என்று பெற்றோர்களுக்கே தெரியாத புதிராக இருக்கிறது. இதனால் திருமணமான தம்பதியினர் பாதிப்பேர் கோர்ட் வாசலில் நிற்கின்றன. வாழ்க்கையில் ஜாதகருக்கு எது எடுத்தாலும் ஒருவித குழப்பம், தயக்கம், பித்துப் பிடித்தவன் போல் செயல்படுவார்கள். ஒட்டுமொத்த முக்கிய காரணம் பெற்றவன் இந்த மனோகாரகன்.
     
  • சந்திரன், ராகு சேர்க்கை கிரகண தோஷம் ஏற்படுத்தும். ஜாதகர் லக்கினத்தில் 2, 7, 8 இருந்த இல்லற குடும்ப வாழ்க்கை சந்தேகம் என்ற பெரும்  கடலில் மிதக்கும்.  தாழ்வு மனப்பான்மை இருக்கும், எதைப் பார்த்தாலும் ஒரு விதபயம் ஏற்படும், தேவையற்ற கெட்ட நினைப்புகள், நடக்காது என்றதை நடக்கும் என்ற ஒரு பயம் கலந்த  பீதி இவர்களுக்கு இருந்துகொண்டு இருக்கும். இதனால் இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பேசுவார்கள் செயல்களும் செய்வார்கள். இவர்கள் சட்டென்று முடிவு எடுக்க முடியாது. சிலபேர் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த குழப்பம் உள்ளவர்கள் தூக்கம் சரியாக இருக்காது.
     
  • சந்திரன் என்பது தாய் அல்லது மாமியாரைக் குறிக்கும், ஜாதகருக்கு சந்திரன் ராகு  சேர்க்கை 4, 9  பாவத்தில் சேர்க்கை பார்வை பெற்றால் தாயார் அல்லது மாமியார் உறவு சுமுகமாக இருக்காது இதுதவிர மற்ற பாவங்களிலிருந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது சிலபேர் தொழிலில் அதிக லாபம் பெறுவார்கள்.
     
  • சந்திரன் ராகு சனி: சேர்க்கை திருமணத்திற்குப் பிறகு அதிகம் மனக் குழப்பத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும்.
     
  • பாதகாதிபதி: கிரகங்களின் பார்வை பாவிகளோடு சேர்ந்த சந்திரன் மேல் பட்டால் சந்தேகத்தின் உச்சத்திற்குச் சென்றுவிடுவார்கள் இவருக்குப் பெரிய நோயாக உருவெடுத்துவிடும் சைகோ போன்ற மனநோயாளியாக மாறிவிடுவார்கள். இந்தவகை ஜாதகர்கள் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். 
  • சூரியன், சந்திரன்: அமாவாசை பௌர்ணமி காலங்களில் மனிதர்களின் மனநிலை பாதிப்பு இருக்கும். அதனால் தான் இந்துக்கள் அந்த நேரம் தெய்வ வழிபாடு மேற்கொள்வார்கள். சூரியன் சந்திரன் சேரும் காலங்களில் அதாவது அமாவாசை காலங்களில் முக்கியமாகத் தீய சக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்திலோ, சூரியன், சந்திரன் கூடிநின்றாலோ, அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் சூரியன் நின்றாலோ மனநலம் பாதிக்கும். 
     
  • சந்திரன்  பாவிகளோடு சேரும்பொழுது மன நோய் தவிர  மற்ற நோய்களின் தாக்கமும் இருக்கும். பெண்களுக்கு கருமுட்டை என்ற உருவாக்கக்கூடிய சந்திரன் குழந்தை பேரை தள்ளிப்போடுவர். சந்திரனால் ஏற்படும் உடல் சார்ந்த நோய்கள் கெட்ட நீரை உருவாக்குவது, நீரினால் ஏற்படும் வைரஸ் தாக்கம், இருதய பாதிப்பு, அம்மை நோய், தொழு நோய், காய்ச்சல், கருப்பை பிரச்னை மற்றும் ஜலத்தால் ஏற்படும் தோஷம் (ஜல தோஷம்). 

மனதை ரிலாக்ஸ் செய்யும் கோவிலும், ஆன்மீக தகவல்கள் மற்றும் மருத்துவ தகவல்கள் நாளை வெளியிடப்படும்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

Email: vaideeshwra2013@gmail.com
Whatsapp:  8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com