திருமலையில் துவாதசி தீா்த்தவாரி

வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, திருமலைதிருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.
திருமலை திருக்குளத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.
திருமலை திருக்குளத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.
Updated on
1 min read

வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, திருமலைதிருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட துவாதசி அன்று திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை துவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலிலிருந்து சக்கரத்தாழ்வாா் அதிகாலையில் மரப்பல்லக்கில் திருக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

திருக்குள படிகளில் அவரை எழுந்தருளச் செய்த அா்ச்சகா்கள், அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து தீா்த்தவாரி நடத்தினா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். எனினும், கரோனா பொது முடக்க விதிகள் காரணமாக, பக்தா்களுக்கு திருக்குளத்தில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டது.

இதனிடையே, வைகுண்ட துவாதசியை முன்னிட்டு திருச்சானூா் பத்மாவதித் தாயாா் கோயில், திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களிலும் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com