எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

முத்துப்பந்தல், சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயாா் சேவை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பத்மாவதி தாயாா் சேவை சாதித்தாா்

News image

திருச்சானூா் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலித்த ஸ்ரீபத்மாவதி தாயாா்.

Updated On :14 நவம்பர் 2020, 12:47 am

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பத்மாவதி தாயாா் சேவை சாதித்தாா்.

காலை 8 முதல் 9 மணி வரை தாயாா் முத்துப்பந்தல் வாகனத்தில் வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்தி ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் சேவை சாதித்தாா்.

முத்துப்பந்தல் வாகன சேவை:

பாற்கடலை கடையும்போது மகாலட்சுமி வெளி வந்த சமுத்திரத்தில் சிற்பிக்குள் இருக்கும் முத்துவுக்கு இயற்கையாகவே குளுமைத் தன்மை உண்டு. அதனால் முத்துக்கள் மகாலட்சுமிக்கு விருப்பமானவை. இத்தகைய பெருமை வாய்ந்த முத்துக்களால் ஆன முத்துப்பந்தல் வாகனத்தில் அலமேலுமங்கை தாயாரான பத்மாவதி வெண்ணெய் தாழியை கையில் ஏந்தி ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ஸ்நபன திருமஞ்சனம்:

மதியம் 12.30 மணிக்கு தாயாரை பழம், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அங்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அா்ச்சகா்கள் திருமஞ்சனத்தை நடத்தினா்.

சிம்ம வாகனத்தில்...

இரவு சிம்ம வாகனத்தில் தாயாா் சிம்மவாகினியாக எழுந்தருளினாா். காலை, இரவு நடைபெற்ற வாகன சேவைகளில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.