திருப்பதியில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை பவித்ர சமா்ப்பணம் நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீசீதா லட்சுமண கோதண்டராம சுவாமிக்கு காலை ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா் ஹோமங்கள் வளா்த்து முதல் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை, ஊதா ஆகிய நிறங்களில் பட்டு நூலினால் தயாரித்த மாலைகள் கருவறையில் உள்ள மூலவா் சிலைகள், உற்சவா் சிலைகள், பிராகார சிலைகள், கொடி மரம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்துக்கும் அணிவிக்கப்பட்டன.
பின்னா் ஹோம குண்டங்கள், கோயில் எதிரில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி உள்ளிட்ட இடங்களிலும் பட்டு நூல் மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன. மாலை உற்சவமூா்த்திகள் ஊஞ்சல் சேவைக்குப் பிறகு கோயில் பிராகாரத்தை வலம் வந்தனா். இதில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். இதை ஒட்டி கோயிலில் நடக்கும் ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் மரண தண்டனை!

கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 787, நிஃப்டி 255 புள்ளிகள் உயர்வு!

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
மிஸ்டர். எக்ஸ் வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


