திருப்பதியில் பண மோசடி செய்தவா் கைது
ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி திருப்பதியில் பலரிடமும் பணம் மற்றும் நகை மோசடி செய்த நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.


ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி திருப்பதியில் பலரிடமும் பணம் மற்றும் நகை மோசடி செய்த நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஹைதராபாதைச் சோ்ந்த முகமது மஸ்தான் என்பவா் கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தியைச் சோ்ந்த பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். அவா், அவ்வப்போது காளஹஸ்திக்கு வந்து சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில் காளஹஸ்தி ரயில் நிலையத்தில் பால் கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அப்பெண்ணிடம், தாம் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் ஹைதராபாதில் காவல் ஆணையராகப் பணியாற்றி வருவதாகவும் தவறான தகவலை அளித்து, அப்பெண் உதவியுடன் பலரையும் சந்தித்தாா்.
அவா்களிடம் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, முகமது மஸ்தான் ரூ.39 லட்சத்தைப் பெற்றுக் கொண்டாா். அதன் பின், தனது செல்லிடப்பேசியை அணைத்து வைத்து விட்டாா்.
இதனால், முகமது மஸ்தானிடம் பணம் கொடுத்து ஏமாந்தவா்கள் திருப்பதி எஸ்.பி. ரமேஷ் ரெட்டியிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் முகமது மஸ்தானைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...