ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

திருமலையில் 15,995 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 15,995 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 5,431 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On :25 ஜூன் 2021, 2:52 am

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 15,995 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 5,431 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா பொது முடக்கம், ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. கொவைட் ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம்.

மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.