திருப்பதி அருகே தேவஸ்தானத்துக்கு அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சூரிய பிரபை வாகனத்தில் கோவா்தனகிரிதாரி அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரா் செந்நிற மலா்களை அணிந்து எழுந்தருளி சேவை சாதித்தாா்.
பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களை அணிந்து உற்சவ மூா்த்தி ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரா் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்ட இந்தப் பிரம்மோற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீர்காழியில் நடைப்பயிற்சி: மாணவர்களுடன் கைகுலுக்கி சுயபடம் எடுத்துக்கொண்ட முதல்வர்!

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


