திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 18,057 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா பொதுமுடக்க ஊரடங்கில் தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை 18,057 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 7,990 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா். கொவைட் காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரைப் பணிகள் நடைபெற்று வருவதால் அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை தேவஸ்தானம் மூடியுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீர்காழியில் நடைப்பயிற்சி: மாணவர்களுடன் கைகுலுக்கி சுயபடம் எடுத்துக்கொண்ட முதல்வர்!

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

