திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: அலைகடலெனத் திரளும் பக்தர்கள்! 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 
திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரத்தைப் பக்தர்கள் முன்னிலையில் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. 

பொதுவாக கந்த சஷ்டி விரதம் அறுபடை வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பதுடன், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான நாளை சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து அக்.31-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்குப் புறப்பாடும், மாலை 6 மணியளவில் சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், அன்றிரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். 

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

மேலும், பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

திருச்செந்தூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) திருச்செந்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். 

மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூா் சிறப்பு ரயில் (06909) திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும்.

இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com