உங்களுக்கு இந்த அறிகுறிகள், குணங்கள் உள்ளதா?

உங்களுக்கு இந்த அறிகுறிகள், குணங்கள் உள்ளதா? அப்படியானால் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி இருப்பதாக அர்த்தம்.
உங்களுக்கு இந்த அறிகுறிகள், குணங்கள் உள்ளதா?
Published on
Updated on
2 min read


உங்களுக்கு இந்த அறிகுறிகள், குணங்கள் உள்ளதா? அப்படியானால் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி இருப்பதாக அர்த்தம்.

ஜாதகத்தில் சந்திரன் வலிமையிழப்பு :

ஒருவரது ஜனன ஜாதகத்தில்,

1.   தேய்பிறை சந்திரனாக இருந்தால்.

2.  சந்திரன் இரு இயற்கை பாப கிரகங்களுக்கு இடையில் சிக்கும்போதும்.

3.  சந்திரன், லக்கின பாப கிரகங்களுக்கு இடையில் சிக்கினால்..

4.  சந்திரனை, இயற்கை மற்றும் பாவ கிரகங்களின் பார்வை பெற்றால்.

சந்திரன் நீச்சம் அடைவது :

சந்திரன், ஒருவரின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருந்தால், (விருச்சிக ராசியாக இருப்பின்)... இங்கு, சந்திரன் நீச்சம் அடைகிறார். 

மேற்கண்ட காரணங்களால், சந்திரன் தமது வலிமையை இழக்கிறார்... 

சரி, சந்திரன் வலிமை இழந்திருப்பதை மேலே கூறப்பட்ட சந்திரனின் நிலையை தமது ஜாதகத்தில் கண்டு அறியலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் இருப்பின் சாமானியரும் /  ஜோதிடம் அறியாதோரும், அவர்தம் குணாதிசயங்களைக் கண்டும் சந்திரன் அவர்களது ஜாதகத்தில் வலிமையை இழந்திருக்கிறார் எனவும் அறியலாம்.

சந்திரனின் வலிமை இழப்பு தரும் அறிகுறிகள் மற்றும் குணாதிசயங்கள்: -

பல அறிகுறிகள் இருப்பினும், எல்லாம் வெளிப்படையாகத் தெரியும் என்று கூறிவிட முடியாது. மேலும், வேறு சில கிரக அமைப்புகளால் அவை வெளித்தெரியாமல் போக வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் கூடிய மட்டும் அனைத்து அறிகுறிகள் மற்றும் குணாதிசயங்களை இந்த கட்டுரையில் காண்போம்.

 சந்திரனின் வலிமை இழப்பு தரும் அறிகுறிகள்:-   

1. சந்திரன் - வஞ்சகம் மற்றும் தந்திரத்திற்குக் காரகராகிறார். அதனால், இந்த சந்திரன் வலிமை குன்றியவர்கள் மற்றவர்கள் தம்மை வஞ்சிப்பதாகவும் தந்திரமாக தம்மை ஏமாற்றுவதாகவும் கருதுவார்கள்.  தமக்கு எப்போதும் எதிர்மறையாக மட்டுமே நடப்பதாக எண்ணுகிறார்கள். இதில் ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினமும், லக்கின அதிபதியும் வலிமை குன்றி இருந்தால், அதிகப்படியாக மேலே குறிப்பிட்டவை நடப்பதோடு, திருடு, பறிபோகும் நிலைக்கு ஆளாவார்கள். 

2. உணவு பழக்கவழக்கத்தை வைத்தும் சந்திரன் வலிமை குன்றியவர்களைக் காண முடியும். ஒரு ஆப்பிள் சாப்பிடுவதாக வைத்துக்கொண்டால் இவர்கள் கடித்துத் தின்னும்போது கடைசி துண்டை சாப்பிடாமல் விட்டு விடுவார்கள். தூக்கி எறிந்தும் விடுவார்கள். தேநீர் அருந்தும் போதும், கடைசி சொட்டை விட்டுவிடுவார்கள்.

குடிக்கும் தண்ணீரிலும் அப்படிதான் சிறிது குவளையில் வைத்துவிடுவார்கள். இதெல்லாம் தான் வலிமை குன்றிய சந்திரன் கொண்ட ஜாதகர்களின் குணாதிசயங்கள். சொல்லப்பட்ட செயல்களை எப்போதாவது செய்தால் அல்ல, எப்போதும் செய்பவர்களுக்குத்தான் அவர் தம் ஜாதகத்தில், சந்திரனின் வலிமை இழப்பு இருக்கும்.

3. தமது தாயுடன் பிரச்னை, தாயிடம்  வேறுபட்ட கருத்துக்கள், தாய்க்கு - உடல் ஆரோக்கிய குறைபாடு போன்றவையும், ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி இருப்பதற்குரிய அறிகுறிகள்.

4. கண் பார்வை குறைபாடு, இடது கண் பாதிப்பு, கண் சம்பந்தமான தலைவலி போன்றவையும், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றியதைத் தெரிவிக்கும் அறிகுறிகள்.

5. சந்திரன் வலிமை குன்றியதோடு, பாவிகள் இணைவு அல்லது பாவிகள் வீட்டிலிருந்தால், தண்ணீரால் பயம் ஏற்படும். நீரால் கண்டமும் ஏற்படும்.

6. இவ்வாறு உள்ள நபரின் வீட்டின் வடமேற்கு மூலையில், வாஸ்து குறைபாடு இருக்கும்.

சந்திரனின் வலிமை இழப்பு தரும்  குணாதிசயங்கள்: -

1. அமைதி இன்மை ஏற்படும். மனம் சஞ்சலித்துக்கொண்டே இருக்கும். இதுவும் சந்திரன் வலிமை இழப்பிற்குக் காரணம்.

2. மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.

3. வலிமை குன்றிய சந்திரனை, மேலும் பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை போன்ற தொடர்பு ஏற்பட்டால், ஜாதகர், விசித்திரமான குணங்கள் மற்றும் குற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கியும் இருப்பதைக் காணலாம்.

4.  இப்படிப்பட்ட சந்திரன் வலிமை குன்றிய ஜாதகர்களால், சந்தோஷமாக பிரயாணம் செய்திட மாட்டார்கள். பயணச்சீட்டை மறுப்பவர்கள், விமான நிலையத்திற்கு மிகுந்த தாமதமாய் செல்பவர்கள் அல்லது ஏதேனும் ஒரு மன இருக்கத்துடனேயே பிரயாணம் செய்வார்கள். உடன் வருபவர்களையும் அதே போன்ற சூழலுக்கு ஆளாக்குவார்கள்.

5.  வெகு சீக்கிரம் பேருந்து / ரயில் / விமான - பிரயாண நடைமேடைக்குச் சென்று காத்திருப்பார்கள். 

6. புறச் சூழல்களால் அல்லது புறக் காரணிகளால் இவர்கள் கட்டுப்பட வேண்டிய சூழலுக்கு ஆள்கிறார்கள். மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். அதிலும் மற்றவர்கள் இவர்களைப் பாராட்ட ஏங்குகிறார்கள்.

சந்திரன் வலிமை இழந்த ஜாதகர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்: -

1. பிரதோஷ கால அபிஷேகத்திற்கு , பால் அளித்தல்

2. தாயை வணங்குதல், தாயைக் கோபப்படாமல் இருக்கச் செய்தல்

3. பெருத்த அலங்காரமற்ற மற்றும் ஆயுதங்களற்ற நிலையில் உள்ள அம்பாள் வழிபாடு (சக்கரம், அர்த்த மேரு, மகாமேரு உள்ள கோவில்களில் உள்ள அம்பாள் வழிபாடு முறையே காஞ்சி காமாட்சி, மாங்காடு காமாட்சி, சென்னை காளிகாம்பாள்)

4.  திங்களன்று தயிர்ச் சாதம் கோயிலில் நிவேதனம் செய்து மற்றவருக்குப் பிரசாதமாக அளித்தல்.

5. பெரும்பாலும் குடும்ப தெய்வங்களை வணங்குதல் போன்றவை செய்திட்டால், சந்திரன் வலிமை இழப்பினால் தரும் கெடு பலன்கள் குறைவதோடு, மனம் தெளிவாக இருக்கும்.


தொடர்புக்கு :  98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com