நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்! 

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்! 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. 


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் காந்திமதியம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடைபெற்றது. 

தொடா்ந்து இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கும், மாலை 6 மணிக்கும் காந்திமதியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

இம் மாதம் 21 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு காந்திமதியம்மன் சன்னதியிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு, கீழரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக காலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயிலை சென்றடைவாா். 22ஆம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயில் அருகேயுள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்மன் காட்சி வைபவம் நடைபெறும். 

23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாணமும், காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்மன் பட்டின பிரவேசமும், 23 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும், 26ஆம் தேதி சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசமும் நடைபெறும். 

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா் சிவமணி, ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com