பொங்கல், தீபாவளி ஞாயிற்றுக்கிழமையிலா? 2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்கள்

2023ஆம் ஆண்டுக்கான அரசுப் பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை


2023ஆம் ஆண்டுக்கான அரசுப் பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நிறைவு பெற சுமார் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாள்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கும் அந்த விடுமுறை பட்டியலில், வரும் 2023ஆம் ஆண்டு 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அரசு பொது விடுமுறையான 24 நாள்களில் தீபாவளி உள்பட 8 நாள்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

விடுமுறை பட்டியலில், முதல் நாளே அதாவது ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ஞாயிற்றுக்கிழமைதான். அதாவது 2023ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி ஞாயிறன்று வருகிறது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியும் ஞாயிற்றுக்கிழமையன்றுதான். இதையெல்லாம் தாண்டி, தீபாவளிப் பண்டிகையும்  ஞாயிற்றுக்கிழமையிலேயே வருவதுதான் சோகம். வரும் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை.

இதுபோல 8 விடுமுறை நாள்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும், மிக முக்கிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும் விடுமுறை நாள்களை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், அரசு ஊழியர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை நாள்களின் பட்டியலைக் காண..

2023ஆம் ஆண்டுகான விடுமுறை பட்டியலில் 24வது விடுமுறையாக டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com