ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில் ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
இந்த யாத்திரையில், உள்ளூர் கிராம மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்துகொண்டனர். ஆண்கள் கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்ட தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்ட இந்த யாத்திரை நன்பகல் 12 மணியளவில் லிங்கபைரவியை வந்தடைந்தது.
வரும் வழியில் ஆலாந்துறை, மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், செம்மேடு என பல்வேறு இடங்களில் அங்குள்ள கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதுதவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த 21 நாள்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய், தானியங்கள், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

