கோவிந்தவாடி மேகாத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேற்காவ நாச்சியார் என்ற மேகாத்த அம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு ராஜகோபுரம் முன் மண்டபத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
கோவிந்தவாடி மேகாத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேற்காவ நாச்சியார் என்ற மேகாத்த அம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு ராஜகோபுரம் முன் மண்டபத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி கிராம தேவதை ஏகாத்த அம்மனுக்கு பொங்கல் வைத்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மறுநாள் 30ஆம் தேதி திங்கள்கிழமை  கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றன. 

யாகசாலை பூஜைகள் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோவில் பூஜகர் டி.எஸ்.சோமு சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 31ஆம் தேதி புதிய விக்கிரகங்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 

நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் புனித நீர் கலசங்கள் மங்கள மேல வாத்தியங்களுடன் ராஜகோபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனைதொடர்ந்து மூலவர் மேகாத்த அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கிராமத்தின் குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com