மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 
மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விழாவின் 7-ஆம் நாள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் நாளை நடைபெறுவதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

இதையடுத்து மகா தீபத்துக்கு ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் 20-க்கும் மேற்பட்டோர் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரையைத் தோளில் சுமந்து சென்றனர். 

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மகாதீப கொப்பரையில் 4,500 லிட்டர் நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. 

இந்த கொப்பரையை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் வணங்கினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com