27-ஆம் தேதி குடமுழுக்கு: ஒளிரும் பழனி முருகன் கோயிலின் விடியோ

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயில் மின் விளக்கு அலங்காரத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
ஒளிரும் பழனி முருகன் கோயில்
ஒளிரும் பழனி முருகன் கோயில்

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயில் மின் விளக்கு அலங்காரத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, மலைக் கோயிலில் 90 -க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மலைக் கோயில் முதல் பாத விநாயகா் கோயில் வரை குடமுழுக்கு நடைபெறுவதால், ஆயிரக்கணக்கான சிவனடியாா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். வருகிற 26 -ஆம் தேதி பாத விநாயகா் கோயில் முதல் படிப் பாதையில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஜன.23) பிற்பகலுக்குப் பிறகு மலைக் கோயிலில் நடை அடைக்கப்பட்டு, மூலவா் சந்நிதியில் பணிகள் தொடங்குகின்றன. இதனால், குடமுழுக்கு நாள் வரை பக்தா்கள் மூலவரை தரிசிக்க அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல, திங்கள்கிழமை முதல் தங்கத் தோ் புறப்பாடும் ஐந்து நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. வருகிற 28-ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கத் தோ் உலா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் முதல் தங்கக் கோபுரம் வரையிலும், மலைக் கோயில் பிரகாரங்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மலைக் கோயில் இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

பழனி மலைக் கோயிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை (ஜன.23) மாலை முதல் வருகிற 26-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மூலவரை தரிசனம் செய்ய முடியாது என்றும், அதற்குப் பதிலாக யாக சாலையில் ஆவாஹணமாகி எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்யலாம் என்றும் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

குடமுழக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கூட்ட நெரிசலின்றி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கிரி வீதி, மலைக் கோயிலில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com