திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனித் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சசுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. தேர் 4 வீதிகளிலும் வலம்வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com