27 நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை: திரளானோர் பங்கேற்பு!

காஞ்சிபுரத்தில் 108 கோ பூஜை பற்றி..
உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் நடைபெற்ற 108 கோ பூஜை.
உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் நடைபெற்ற 108 கோ பூஜை.
Updated on
1 min read

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள உக்கம் பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகர் திருக்கோயிலில் 108 கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பசுவிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது உக்கம் பெரும்பாக்கம் கிராமம். இங்கு 27 நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் நட்சத்திர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது அவரவர் ராசிகளுக்கு ஏற்ப மரங்கள் அங்கு வைக்கப்பட்டும் அதற்கு சிறப்புப் பூஜைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

வருடந்தோறும் பொங்கல் திருநாளையொட்டி காணும் பொங்கல் அன்று 108 கோ பூஜை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கோ பூஜை திருவிழா காலை நட்சத்திர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் உடன் தொடங்கி சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவன் பார்வதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் நட்சத்திர விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள திடலில் 108 கோ பூஜைகளுக்குப் பக்தர்கள் மஞ்சள் குங்குமம் மற்றும் துண்டு பூ மாலை என அணிவித்துச் சிறப்புத் தீபாராதனை ஈடுபட்டு வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண் மற்றும் ஆண் பக்தர்களும் கோ பூஜையில் கலந்துகொண்டு குடும்ப நன்மை கருதி வழிபாடு மேற்கொண்டனர். மாலை அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கான சிறப்புத் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற உள்ளது.

Summary

The 108 Cow Puja was successfully held at the 27 Nakshatra Vinayagar Temple located in Ukkam Perumbakkam on the Kanchipuram-Vandavasi road.

உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் நடைபெற்ற 108 கோ பூஜை.
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com