திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில், சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும். 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலின் மலை மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

அடிவாரம் அருகே தாழக் கோயிலில் அருள்மிகு பக்தவசலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். வேதமலை ,பட்ச தீர்த்தம், கழுகுன்றம், சங்க தீர்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய இக்கோயிலில் சித்திரை மாதம் 11 நாள்கள் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரைப்பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன்,கோயில் செயல் அலுவலர் புவியரசு, மேலாளர் விஜயன் மற்றும்  சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வேத மந்திரங்களுடன் சாமி கொடிமரம் அருகில் எழுத்தருள சித்திரைப் பெருவிழ்கொடியேற்றப்பட்டது.

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

பின்னர் சாமி புறப்பாடு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து  திருவிழாவின் முதல் நாள் உற்சவம் துவங்கியது. ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

முக்கியத் திருவிழாவாக 3 ஆம் நாள் உற்சவமான 63 நாயன்மார்கள் மலைவலமும், 7 ஆம் நாள் உற்சவமான தேர் திருவிழா ( பஞ்சரதம்) திருவிழாவும் நடைபெறுகிறது.

மலைக்கோயில் மூலவர் வேதகிரீஸ்வரருக்கும், தாழக் கோயில் அருள்மிகு பக்தவசலேஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைப்பெற்றதுடன், 4 மாட வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com