சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

News image

பொங்கல் வைக்க உகந்த நேரம்

Updated On :13 ஜனவரி 2024, 10:43 am

வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்.  உத்தராயணம் எனச் சொல்லக்கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதங்களாகும்.

Story image

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது. மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி சமயத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துகொள்ள வேண்டும்.

மகரம் என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களை நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிட்டும்.

தற்போது வரும் தை 1-ம் தேதி (15.01.2023) திங்கள்கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

பொங்கல் காப்புக் கட்ட நல்ல நேரம் - காலை 9.00 - 10.30 

பொங்கல் வைக்க உகந்த நேரம் 

காலை 6.00 - 7.30
காலை 9.00 - 10.30
மதியம் 12.00 - 1.30

மாட்டுப் பொங்கல்

16.01.2023 - செவ்வாய்கிழமை
கோ / காளை பூஜைக்கு உகந்த நேரம்
காலை 7.30 - 9.00
காலை 10.30 - 12.00

கனு பொங்கல் வைக்க நல்ல நேரம்

17.01.2023 - புதன்கிழமை
காலை 6.00 - 7.30
காலை 9.00 - 10.30

Story image

உத்தராயணம் புண்யகால (தை மாதப் பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தைச் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.