
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும். இங்கு 60 தமிழ் வருடத் தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருடத் தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம்.
மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு "ஓம்" எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு. எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் நன்மைகள் தேடி வரும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. குழந்தை வரம் வேண்டும், வாழ்க்கையில் வெற்றி வேண்டும் என்பவர்கள் ஆடிக் கிருத்திகையின் விரதம் இருந்து முருகனையும், அம்பிகையையும் வழிபட்டு அன்றைய தினம் முருகப் பெருமானைக் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், பாலால் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதும் மிகவும் ஏற்றதாகும்.
இந்நிலையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.