அம்புபாச்சி மேளா: 3 நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடல்!

51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா தேவி திருக்கோயில்.
அம்புபாச்சி மேளா: 3 நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடல்!
Published on
Updated on
1 min read

அசாமின் குவகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா சனிக்கிழமை தொடங்கியதையடுத்து அடுத்த மூன்று நாள்களுக்கு கோயில் நடை மூடப்பட்டுள்ளது.

51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா தேவி திருக்கோயில். அன்னையின் உடற்கூறுகளில் தலைப்பாகம் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம் என்றழைக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் அம்புபாச்சி மேளா என்பது அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கடக்கிற மூன்று நாள்களும் கோயிலின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலம் முடிவடைந்த பின்னர் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் காமாக்யா கோயிலில் குவிந்து வருகின்றனர்.

அம்புபாச்சி மேளா: 3 நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடல்!
மெத்தனத்தால் விளையும் விபரீதம்

அதன்படி, கமாக்யா கோயில் இன்று காலை 8.43க்கு அடைக்கப்பட்டது. இதோடு ஜூன் 25-ம் தேதி இரவு 9.07க்கு அம்மனின் மாதவிடாய் சுழற்சி நிறைவடைகிறது. ஜூன் 26 அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், சம்பிரதாய பூஜைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில்..

அம்புபாச்சி மேளாவை முன்னிட்டு பக்தர்களை நான் வரவேற்கிறேன். இந்த மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மேளாவை சமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை கம்ரூப் பெருநகர மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். காமாக்யா ரயில் நிலையத்தில் 5 ஆயிரம் பேரும், பாண்டு துறைமுகத்தில் 12 முதல் 15 ஆயிரம் பேர் தங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்புபாச்சி மேளா: 3 நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடல்!
ராமர், கிருஷ்ணருடன் தொடர்புடைய புனிதத் தலங்களை மேம்படுத்த திட்டம்: ம.பி. முதல்வர்

விஐபி பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதான கோயிலுக்குச் செல்லும் சாலையில் அவசர பயன்பாட்டு வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

மேலும், குறிப்பிட்ட இடங்களில் கழிப்பறைகள், தெரு விளக்குகள், சுகாதார முகாம்கள் மற்றும் சாலைகளில் தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com