
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கடவுள் ராமர், கிருஷ்ணருடன் தொடர்புடைய இடங்களை புனித யாத்திரை தலங்களாக மேம்படுத்த உள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் யாதவ் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடவுள் ராமர், கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களை கண்டறிந்து அவற்றை புனித யாத்திரை தலங்களாக மேம்படுத்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில தலைநகர் போபாலின் நுழைவு இடங்களில் இந்த தெய்வங்களுக்கு வரவேற்பு வாயில்கள் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் 11-ம் நூற்றாண்டின் பரமரா வம்சத்தைச் சேர்ந்த ராஜாபோஜ் மற்றும் விக்ரமாதித்யா ஆகியோருக்கும் நுழைவு வாயில்களை அமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கலாசாரம் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காக, மாநில எல்லைகளில் நுழைவு வாயில்களை உருவாக்க அதிகாரிகளுக்கு யாதவ் அறிவுறுத்தினார்.
மதச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்குமாறு நிர்வாகத்திடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.