
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மலையேறி சுவாமி தரிசனம் செய்தவற்கு 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசையை, பௌர்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 5 -8) வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நாள்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், எளிதில் தீப்பற்றக்கூடிய, தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்கு எடுத்துச் செல்லக் கூடாது என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.