

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் முக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கோவை மாவட்டம் வடவள்ளி நவாவூர் பிரிவு பகுதியில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நரசிம்மர்கருடன், வராகன், ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சனேயர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயராக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு முக்தி அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயரை வழிபட்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.தொடர்ந்து மாலை ஸ்ரீ நவாம்ச ப்ரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை முன்னிட்டு இன்று மாலை நிகும்ளா யாகம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.