மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

மார்கழி மாதத்தில் 30 நாள்களும் சுயம்பு லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில் பற்றி..
உவரி கோயிலின் பிரதி படம்
உவரி கோயிலின் பிரதி படம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் அமைந்துள்ளது பிரம்பசக்தி உடனுறை சுயம்புநாதர் திருக்கோயில். இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 30 நாள்களும் 7 மணிக்கு சூரிய ஒளி சுயம்பு லிங்கம் மீது விழுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

சிவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் மிகவும் முக்கியமானவர் லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பாக உள்ளது.

சூரியன் தன்னுடைய பொற் கரங்களை லிங்கத்தின் மீது செலுத்தி அரவணைக்கும் காட்சி ஒன்றல்ல இரண்டல்ல மார்கழி மாதம் 30 நாளும் காணலாம். பல்வேறு கோயில்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தாலும் குறிப்பாக ஒரு மாதம் முழுவதும் நிகழ்வது மிகவும் அரிதானதே. இதன் அடிப்படையில்தான், இயற்கை இறைவனுக்கு கவரி வீசுவது உவரி என்ற பெருமையும் உள்ளது.

இந்த கோயிலுக்குச் சென்று வந்தால் மன நிம்மதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட்டால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற பல்வேறு விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த கடலோரத்தில் பசுமைக் கொண்டாடும் கிராமத்தில் அமைந்துள்ள உவரி சுயம்பு லிங்கக் கோயிலை ஒருமுறையேனும் சென்று தரிசித்து வருதல் நலம்.

உவரி கோயிலில் விசேஷமாக கடற்கரை மண்ணை 11 அதல்லது 41 ஓலைப் பெட்டியில் சுமந்து போட்டு வழிபடுதல் என்பது சிறப்பு வழிபாடாக பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பாக கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் இங்கே நான்கு ஊற்றுகள் காணப்படுகின்றன. அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். இங்கிருந்துதான் சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது.

மங்களம் அருளும் மார்கழி மாதத்தில் இங்குள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com