மாசிமக கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
30 ஆண்டுகளுக்குப் பிறகு மாசிமக திருவிழாவில் கொடி ஏற்றும்போது கயிறு அறுந்து விழுந்தது..
impress
impress
திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மக பிரமோற்சவ கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்து விழுந்ததால் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமானதாகும். இது ஈசனின் 64வது திருவிளையாடல் சாட்சிநாத படலம் அரங்கேறிய தலமாகப் போற்றப்படுகிறது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இக்கொடியேற்ற நிகழ்வின் போது, பூஜைகள் செய்து கொடி ஏற்றும்போது கொடி பாதி தூரம் வரை கூட ஏறாத நிலையில் திடீரென கயிறு அறுந்து விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு பெரிய ஏணியுடன் வலுவான மாற்றுக் கயிறும் கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் புதிய கயிற்றைக் கட்டி பிறகு மீண்டும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதனால் கொடியேற்ற நிகழ்வு சுமார் 20 நிமிடங்கள் தாமதமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...