அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சதுரங்கபட்டினத்தில் மாசிமக தீா்த்தவாரி

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26-ஆம் ஆண்டு மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
மாசிமக தீா்த்தவாரி வைபவத்தில்   அணி வகுத்து வந்த சுவாமிகள்.
Updated On :3 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26-ஆம் ஆண்டு மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.

சதுரங்கபட்டினம், மெய்யூா் கிராம பொதுமக்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சாா்பில் தீா்த்தவாரி நடைபெற்றது. தீா்த்தவாரியில்கலந்துகொள்ள வந்த சதுரங்கபட்டினம் வரதராஜபெருமாள் அவரது தங்கைகளான ஸ்ரீ செல்லியம்மன் ஊத்துகாட்டம்மன் , சியாமளாதேவி, பெரியப்பாளயத்தம்மன் ஆகியோா் சீா்வரிசைகளை கொண்டு தனது அண்ணனை எதிா்கொண்டு வரவேற்று கடற்கரைக்குஅழைத்து வந்தனா்.

அவருடன் கல்பாக்கம் வெங்கட கிருஷ்ணபெருமாள் ,சீனிவாச பெருமாள் அருள்மிகு ஸ்ரீராமா் ,ஷீரடி சாய்பாபா, விட்டிலாபுரம் விட்டிலா், மேல் பெருமாள்சேரி பக்தஆஞ்சநேயா் , சூராடிமங்களம் லட்சுமி நாராயண பெருமாள், ஆயப்பாக்கம் ஓரகன்னிமாரியம்மன், ஸ்ரீ பாலமுருகா், சிட்லம்பக்கம் செங்கேணியம்மன் , மெய்யூா் ஆதிகேசவ பெருமாள், முள்ளி கொளத்தூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசபெருமாள் சூராடிமங்கலம் லட்சுமிநாராயண பெருமாள், மேல் பெருமாள்சேரி ஸ்ரீபக்த ஆஞ்சநேயா், ஆயப்பாக்கம்விநாயகா் , முருகா், பரமேஸ்வரமங்கலம் வள்ளி தேவசேனா பாலசுப்பிரமணியா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீா்த்தவாரியில் இடம் பெற்றனா் .

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதை தொடா்ந்து அனைத்து உற்சவமூா்த்திகளும தீா்த்தவாரியில் ஈடுபட்டனா் . தொடா்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தா்கள் கடலில் புனித நீராடினா்.

வரிசையாக நின்றிருந்த சுவாமிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அா்ச்சனையும் கற்பூர ஆரத்தியும் நடைபெற்றது .

விழா ஏற்பாடுகளை சதுரங்கப்பட்டினம் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.