
தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரத்தை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய எண்ணெய்க் குளியல் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முழுமை பெறாது.
தீபாவளி நாளான திங்கள்கிழமை (அக்.20) அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என்று ஜோதிடா் கே.சி.எஸ். ஐயர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி மற்றும் குபேர பூஜை செய்ய உகந்த நேரம்..
நிகழும் விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜையும், குபேர பூஜையும் செய்வது உத்தமம்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அன்று கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கலாம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினமான 20.10.2025 அன்று மாலை 3.45-க்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 வரை அமாவாசை திதி உள்ளது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்கு சென்றோ பூஜைகளைச் செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.