புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்!

ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்!
Published on
Updated on
1 min read

ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்புலங்கள் எடுத்து கோவில் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்குப் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நவதானியங்கள் கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்றன. பின்னர் மாலை மாற்று நிகழ்வும், அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கும் - அம்பாள் வள்ளி தேவசேனாவுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் கிராம முக்கியஸ்தர்கள், மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.

Summary

The wedding ceremony of Valli Devasena Subramania Swamy was held at the Sri Soundaranayaki Sametha Putridankondeeswarar Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com