

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீநந்தனார் வீதிஉலா சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து ஶ்ரீநந்தனார் உருவசிலை ஊர்வலம் புறப்பட்டு சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தது. அங்கு நந்தனார் கல்விக் கழக தலைவர் கே .ஐ . மணிரத்தினம் தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமத்துவ மக்கள் படை நிறுவனர் ப.சிவகாமி நந்தனார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
நந்தனார் பட ஊர்வலம் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தைச் சென்றடைந்தது. கீழசன்னதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் சிறப்புச் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே. ஐ. மணிரத்தினம் பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.