ஐபிஎல் 2026! வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்க கொல்கத்தா அணியை பிசிசிஐ வலியுறுத்தல்!

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் போட்டியில் நீக்குமாறு கொல்கத்தா அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்
முஸ்தாபிசுர் ரஹ்மான்
முஸ்தாபிசுர் ரஹ்மான்X | Mustafizur Rahman
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவதைத் தவிர்க்குமாறு கொல்கத்தா அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு எதிராக தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும்நிலையில், அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் ஏலத்தில் எடுத்ததற்காக கொல்கத்தா அணிக்கு அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்குமாறு கொல்கத்தா அணியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

வேண்டுமென்றால், அவருக்கு மாற்றாக வேறொரு வீரரைப் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் கொல்கத்தா அணியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா (கேகேஆர்) அணியில், 2026 ஆம் ஆண்டு போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், 2016-லிருந்தே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ள முஸ்தாபிசுர், முதன்முறையாக கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்தாபிசுர் ரஹ்மான்
ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்
Summary

BCCI asks Kolkata Knight Riders to release Mustafizur Rahman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com