கோடி தோஷம் தீர்க்கும் வானமுட்டிப் பெருமாள்!

கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள் கோயிலைப் பற்றி..
கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்
கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்
Updated on
2 min read

தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் அத்தி சிலைகள் ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் விளங்குகிறது. அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன.

அத்தி மர அற்புத சக்தி அதர்வண வேதத்தில் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. அரிச்சந்திரன் தனக்குக் கிரீடமும் மற்றும் சிம்மாசனமும் அத்தி மரத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது. பழம்பெரும் காலங்களில் நம் முன்னோர்கள் அத்தி மரத்தில் தாயத்து செய்து கழுத்தில் போட்டுக்கொண்டனர். இவை அனைத்தும் ஒரு சுகபோகம் பெற என்பது ஒரு சூட்சுமம். அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது என்பது போல சுக்ராச்சாரியார் மறைந்து நின்று தாக்கக்கூடியவர். அத்தியின் சுத்தி பற்றிய எடுத்துக்காட்டு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். அத்தியின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்பொழுது சூரியன் சுக்கிரன் புதன் அனைவரும் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் வரப்போகிறது. இனி நம் மக்களுக்கு நல்லதே நடக்கும். இந்த காலகட்டத்தில் தான்  திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அத்திவரதர் பல வருட காலங்களுக்குப் பிறகு இங்கு உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல வருட காலம் நீரில் வாசம் செய்த இந்த அத்தி வரதப்பெருமாள் என்னமாதிரி விசேஷம் என்று நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. இங்குள்ள புராண கதைப்படி பிரம்மன் தன் யாகத்தின் நெருப்பில் பெருமாள் சிலையைப் பாதித்தது. பின்பு இதனால் பிரம்மதேவன் என்ன செய்வதறியாமல் தவித்திருந்தார். 

பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர்விக்கக் கோயிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்கக் கூறினார். பெருமாள் கட்டளையின்படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும் என்பது அங்குப் பின்பற்றப்படுகிறது.

சூரியனின் தாக்கம் உள்ள ஜாதகருக்கும் இங்கு உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் உள்ள தீர்த்தம் சுக்கிரனோடு பலம் பெற்றது. அதனால்தான் இங்கு வழிபடுபவர்களுக்கு முக்கியமாக கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், சூட்டால் ஏற்படும் நோயினை அகற்ற, குழந்தைப் பேறு பெற இந்த குள தீர்த்தம் விசேஷம்.  அத்தி வரதரைப் பற்றி அனைத்து பத்திரிகைகளிலும் கூறப்பட்டுள்ளது. அதுதவிர மற்ற அத்தி மர கடவுளையும் தரிசிப்போம்.  

மயிலாடுதுறை செல்லும்பொழுது கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள் கோயிலில் 15 அடி அழகான உயரமான அத்தி பெருமாளைக் காணலாம்.  சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி மார்பில் மகாலட்சுமி விளங்கச் சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்தார். குடகுமலை அரசன் தன் பாவங்களால் ஏற்பட்ட குட்ட நோயினை இந்த ஆலயத்தில் உள்ள மகரிஷி தீர்த்தத்தில் குளித்து வானமுட்டி அத்தி பெருமாளைத் தரிசித்து, பாவ விமோசனம் பெற்றார். கோடி பாவம் தொலைந்த காரணத்தால் இவ்வூர் கோடி ஹத்தி என்று பெயர் பெற்றது. அதுவே இன்று கோழிகுத்தி பெருமாள் என்று மறுவியது. தன் நோயும், வினையும் நீங்கிய மன்னன் மனமகிழ்ந்தார். அத்தி மரத்தால் செய்வித்த ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்னும் பல பாவ விமோசன கதைகள் இங்குக் கூறப்படுகிறது.

புதன் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இங்கு நீராடினால் சரும நோய்கள் விலகும், வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. சுகாதிபதி சுக்கிரனால் மற்றும் கர்ம காரகன் சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டவர்கள் இங்கு விமோசனம் அடைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com