ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 7,754 பக்தர்களைக் கொண்ட 12வது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டுள்ளது.
ஜூலை 2 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை இதுவரை 2.52 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 12வது குழு புறப்பட்டுள்ளது. இதில் 5,383 ஆண்கள், 2,071 பெண்கள், 222 சாதுக்கள், 16 குழந்தைகள், 4 திருநங்கை உள்பட 7,754 பேர் 303 வாகனங்களில் புறப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழு, இரண்டு தனித்தனி குழுக்களாகப் புறப்பட்டது. பால்டால் வழித்தடத்தில் 133 வாகனங்களும், பஹல்காம் வழித்தடத்தில் 170 வாகனங்களும் இன்று அதிகாலை வெவ்வேறு நேரத்தில் புறப்பட்டுள்ளன.
57 நாள்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.
Summary
The 12th batch of 7,700 pilgrims has set out for Amarnath!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









