பழனி முருகன் கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
பங்குனி உத்திர விழாவையொட்டி பழனியில் கட்டண தரிசனம் ரத்து..

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில்
DPS

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில்
DPS
பங்குனி உத்திர விழாவையொட்டி பழனியில் மூன்று நாள்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேவல், மயில், வேல், பாம்பு உள்பட படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்குக் காப்புக் கட்டப்பட்டது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து, பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கும். அதன்படி, திரளான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே தீர்த்த காவடி எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் என்ற முன்னுரிமை இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...