மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கி வந்த அழகர் இன்று காலை வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார்.
இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து மதிச்சயம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகர் மீது அங்குக் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக தோப்பரை பைகளைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
முன்னதாக, அழகர் முன்பாக வரும் அழகர் கோயில் மற்றும் விசிறிகளுக்கு பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாகமாக வரவேற்றனர். தீர்த்தவாரியின்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாகத் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக பிரஷர் பம்புகளைப் பயன்படுத்தி சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு பிரஷர் பம்புகளுடன் வந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பையைப் பயன்படுத்தி மட்டுமே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.
Summary
Clad in green silk and mounted upon a golden horse-vehicle, He graced the Vaigai River amidst a throng of hundreds of thousands of devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










