காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!

தக்கோலம் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா பற்றி..

Dakshinamurthy at the Thakkolam Sri Jalanatheeswarar Temple

தக்கோலம் ஸ்ரீஜலநாதீஸ்வரா் கோயிலில் உள்ள தட்சிணாமூா்த்தி - file photo

Published On :20 மே 2026, 6:33 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலம் அருள்மிகு ஜலநாதீஸ்வரா் கோயிலில் மே 26-ஆம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளன.

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருக்கோயிலான இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு இடது காலைக் குத்துக்காலிட்டு அமர்ந்து அபூர்வமாகக் காட்சியளிக்கிறார். ஸ்ரீ தட்சிணாமூா்த்தி அமைந்துள்ள இந்தக் கோயில், தமிழ்நாட்டின் 3-ஆவது குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.

வாக்கியப் பஞ்சாங்கப்படி, மே 26 ஆம் தேதியன்று வைகாசி 12-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.08 மணியளவில் குருபகான் மிதுன ராசியில் இருந்து புனர்பூசம் 4 ஆம் பாதம் கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

இதனையொட்டி திருவூறல் எனும் தக்கோலம் பேரூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருக்கும் குருபகவான் அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தரிசனமும் நடைபெற உள்ளது.

குருப்பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள் - மிதுனம், மீனம், மகரம், விருச்சிகம், கன்னி.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் - கடகம், ரிஷபம், மேஷம், கும்பம், தனுசு, துலாம், சிம்மம்.

விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ந. அருள்பிரகாசம், ஆய்வாளர் வ. அமுதா, செயல் அலுவலர் ப. பரந்தாமக் கண்ணன் மற்றும் பாபு குருக்கள், கார்த்திகேயன் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அரக்கோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் தக்கோலத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு அரக்கோணத்திலிருந்தும் வேலூர், காஞ்சிபுரத்திலிருந்தும் எளிதில் அடையக் கூடிய வகையில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Summary

The Guru Peyarchi (Jupiter Transit) festival is scheduled to take place on May 26th at the Arulmigu Jalanatheeswarar Temple in Thakkolam, near Arakkonam in the Ranipet district. As part of the festivities, special abhishekam (ritual bathing) and decorative darshan will be performed for Sri Dakshinamurthy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.