மழை வேண்டி 1008 குடம் அபிஷேகம்... அடுத்த சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!
களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆச்சரியம்..

அக்னீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகம் - video crop
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி 1008 குடம் புனித நீர் அபிஷேகம் நடந்து வரும் நிலையில், தீடிரென கொட்டித் தீர்த்த மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் 1,500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காமாட்சி உடன் வரை அக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மழையின்றி அவதிப்பட்டு வருவதால், ஸ்ரீ அக்னீஸ்வரர் மூலவருக்கு 1008 புனித நீர் குட அபிஷேகம் நடத்த சிறப்பு யாகம் காலை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 1008 சிவ மற்றும் விஷ்ணு ஆலயங்கள் பெயர்கள் மற்றும் அதன் தீர்த்த குளங்களின் பெயர்களைக் கூறி சிறப்பு அபிஷேகம் 11 மணி முதல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திடீரென இரண்டு மணி அளவில் கருமேகம் சூழ்ந்து களக்காட்டூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மெல்ல மெல்லக் கனமழை மதியம் 2 மணி முதல் தற்போது நான்கு மணி வரை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னீஸ்வரருக்கு 1008 குட புனித நீர் அபிஷேகம் ஊற்றி பூஜை செய்த நிலையில், கனமழை தொடர்ந்து பெய்தது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


