அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை தொடரும்! (நவ. 8)
காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மழை (கோப்புப்படம்) - படம்: Din
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியில் நிலவும் காற்று இடையூறு காரணமாக இன்று (நவ. 8) டெல்டா மாவட்டங்களிலும் காரைக்காலிலும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர் உள்பட ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ. 8) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலூர், நாமக்கல், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Meteorological Centre has stated that rain will continue in 21 districts, including Chennai, for the next 2 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


