தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பணப் பலன்களை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

Updated On :6 ஜனவரி 2021, 7:49 am IST

போக்குவரத்து தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வுக்கான பணப்பலனை உடனடியாக வழங்கிட வேண்டும், நவம்பா் 2015 முதல் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பணிக்காலத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளா் குடும்பங்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அமைப்புத் தலைவா் பழனிவேல், மாநில துணை பொதுச் செயலாளா் செல்வராசன், சேலம் கோட்ட பொதுச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.