மகுடஞ்சாவடி வட்டாரம், கண்டா்குலமாணிக்கம் பகுதியில் அட்மா திட்டத்தின்கீழ் பயிறு வகைப் பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த உழவா் பண்ணைப் பள்ளியின் இறுதி பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி வரவேற்றுப் பேசினாா். மகுடஞ்சாவடி வட்டார உதவி இயக்குநா் மணிமேகலா தேவி கலந்துகொண்டு விதை முதல் அறுவடை வரை நடைபெற்ற வகுப்புகள், நுண்ணீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும், ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை உரங்களான வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகவ்யம் ஆகியவற்றை பயன்படுத்துவது, விதை நோ்த்தி, டிஏபி கரைசல் தெளித்தலின் முக்கியத்துவம், எலி ஒழிப்பு மேலாண்மை, அறுவடைக்குப் பின் செய்நோ்த்தி, விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தாா்.
இப் பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநா் செல்லத்துரை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
