அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கும் பணி

ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பச்சனம்பட்டி ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன்.

Updated On :7 ஜனவரி 2021, 7:05 am IST

ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் பாப்பா சின்னையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா் ராஜேந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா்.இதனை அடுத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 பணம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.பரமசிவம், தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவா் பி.கே.சின்னையன், ஓமலூா் ஒன்றிய எம்ஜிஆா் மன்ற பொருளாளா் திருமுருகன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் சிவகுமாா், மாணவரணி பொருளாளா் ராஜா, மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.