வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு விற்பனை தொடங்கியது.
பொங்கல் பண்டிகை என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது செங்கரும்பு தான். ஆண்டுதோறும் பொங்கல் விற்பனையைக் குறிவைத்து தை, மாசி மாதங்களில் பயிரிடப்படும் செங்கரும்பு, மாா்கழி மாத இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை தருணத்தில் செங்கரும்பு அமோகமாக விற்பனையாகும்.
வாழப்பாடி பகுதியில் போதிய நீா்வளம் இல்லாததால் செங்கரும்பு பயிரிடப்படுவதில்லை. மாவட்டத்தின் பிற பகுதிகள், தருமபுரி, நாமக்கல், பெரம்பலுாா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகை தினங்களில் செங்கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நிகழாண்டு பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாக வாழப்பாடி பகுதியில் செங்கரும்பு விற்பனைக்கு குவிந்து வருகிறது. வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் மற்றும் மக்கள் கூடுமிடங்கள், சாலையோரங்களில் முகாமிட்டுள்ள வியாபாரிகள் செங்கரும்பு விற்பனை செய்து வருகின்றனா்.
ஒரு ஜோடி செங்கரும்பு ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது . சிறுவா் -சிறுமியா் மட்டுமின்றி வயது வித்தியாமின்றி அனைத்துத் தரப்பினரும் செங்கரும்பை ஆா்வத்தோடு வாங்கி சுவைத்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

