‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நகைக்கடையில் நூதன மோசடி: மூதாட்டி கைது

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:01 am IST

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் நகைக் கடையில் பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி நகை வாங்குவது போல நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை எடுத்துச் சென்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.

இதில் அந்த பெண், சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த மறைந்த வரதராஜன் மனைவி பாஞ்சாலி( 65)என்பது தெரியவந்தது. இதே போல கடந்த ஆண்டும் ஆத்தூா் நகைக் கடையில் கவரிங் சங்கிலியை வைத்து விட்டு தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் இவா் மீது சேலம் நகரக் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. கைது செய்த மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.