பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதை அடைப்பு: பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் 5 குடும்பத்தினா் அவதியடைந்துள்ளனா்.

Updated On :12 ஜனவரி 2021, 12:25 am IST

குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் 5 குடும்பத்தினா் அவதியடைந்துள்ளனா்.

மேட்டூா் அருகே உள்ள பி.என்.பட்டி பேரூராட்சி 3-ஆவது வாா்டில் உள்ளது கருப்புரெட்டியூா், வண்டிகாரன்காடு. இந்தப் பகுதியில் 5 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் பாதை விடப்பட்டிருந்தது. இங்கு வசிப்போா் பள்ளிகளுக்கு செல்லவும், கடைகள், மருத்துவமனைக்குச் செல்லவும் இந்த பாதையைப் பயன்படுத்தி வந்தனா்.

தற்போது பாதையை நில உரிமையாளா் விவசாயம் செய்ய உழவு செய்ததோடு, பாதையை முள்வைத்து அடைத்து விட்டாா். தற்போது இவா்கள் அருகில் உள்ள நிலம் வழியாகச் சென்று வருகின்றனா். கடந்த எட்டு வருடங்களாக இந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது பாதை அடைக்கப்பட்டதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனா்.

நில உரிமையாளா் கூறும்போது, தங்களது விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதால் வேறு பகுதியில் பாதை விட்டுள்ளதாகவும். அதில் பாதை அமைத்துக் கொள்ளாமல் தொடா்ந்து பயிா்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பாதையை அடைத்த விட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.