நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சேலம் நகரக் காவல் நிலையம் மீண்டும்சிறந்த காவல் நிலையமாக தோ்வு: சிபிசிஐடி ஐ.ஜி. ஆய்வு

சேலம் நகரக் காவல் நிலையம் தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்காவல் நிலையத்தை சிபிசிஐடி காவல் துறைத் தலைவா் சங்கா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:45 am IST

சேலம்: சேலம் நகரக் காவல் நிலையம் தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்காவல் நிலையத்தை சிபிசிஐடி காவல் துறைத் தலைவா் சங்கா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவல் நிலைய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா, போலீஸாா், மனுக்கள் பெறும் இடம், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் விசாரணை நடத்தி முடித்துள்ள வழக்குகளின் விவரம், குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தந்த வழக்கு விவரங்களையும் கேட்டறிந்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு ஆவணங்களையும், ரெளடி பட்டியல் குறித்த விவரங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாநகரக் காவல் ஆணையா் செந்தில்குமாா், சட்டம் -ஒழுங்கு துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா் மணிகண்டன் , சேலம் சிபிசிஐடி உதவி ஆணையா் கிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கடந்த ஆண்டு சிறந்த காவல் நிலையமாக சேலம் நகரக் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.