நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 2:48 am IST

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15ஆம் தேதி வரை கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 137 நாள்களுக்கு 9.06 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து பாசனத்துக்கான நீா்த் தேவை குறையும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. 137 நாள்களுக்குப் பிறகும் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீா் விட கோரியதால் அவா்களின் வேண்டுகோளை ஏற்று பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நாள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 153 நாள்களுக்குப் பிறகு கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. கால்வாய்ப் பாசனப் பகுதிகளுக்கு மேட்டூா் அணையிலிருந்து 8.95 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சனிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 105.58அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 2, 555 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 72.26 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.